கார்த்தி சிதம்பரம் புட்டு புட்டு வெச்சிட்டாரே.. அதென்ன 888.. பெஸ்ட் ரூட்.. கோட்டைக்கு பறந்த மேட்டர்
காரைக்குடி: தமிழ்நாடு அரசுக்கு, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சில முக்கிய யோசனைகளை தெரிவித்துள்ளார்.. அதுதான் தற்போது அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
சமீபத்தில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி... இந்த புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததை கண்டித்து காங்கிரஸ் கட்சி உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்திருந்தன..
888: இந்த திறப்பு விழாவின்போது ஆட்சியதிகாரத்திற்கான குறியீடாக செங்கோல் முன்னிறுத்தப்பட்டதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது...

அந்தவகையில், மோடி அரசால் திறக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற திறப்பு செய்தியானது, மிகுந்த பரபரப்பை கிளப்பியது.. அத்துடன், புதிய பாராளுமன்ற கட்டிடமும் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. முக்கியமாக, மக்களவை உறுப்பினர்களுக்கென்று 888 இருக்கைகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.. இதற்கு முந்தைய பாராளுமன்றத்தின் மக்களவையில் வெறும் 552 இருக்கைகள் மட்டுமே இருந்தன..
சீட் எண்ணிக்கை: பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 543 ஆகும். ஆனால் புதிய பாராளுமன்றத்திலோ மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை 888 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதென்ன 888 கணக்கு? என்பதே பலரது கேள்வியாக இருந்த நிலையில், இதற்கு ஒரு யூகமான விளக்கத்தை தந்துள்ளார் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம். செய்தியாளர்களுக்கு காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்துள்ளார்.
அந்த பேட்டியின்போது, இந்த 888 சீட்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 இருக்கைகள் இருப்பதற்கு காரணம் சரியாக தெரியவில்லை... ஒருவேளை பிரதமரின் ராசி எண் 8 என்பதால் 888 இருக்கைகள் வைத்திருக்கலாம் என்று புது தகவலை தெரிவித்துள்ளார்.
ஐடியாக்கள்: தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, தமிழகத்தில் கள், மின் லாட்டரி விற்பனையை தொடங்க வேண்டும் என்று சொன்னதுடன், திமுக அரசுக்கு சில யோசனைகளையும் தெரிவித்துள்ளார்.. என்ன தெரியுமா?
மக்களவை தேர்தலில் 39 இடங்களிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றிபெறும். கடந்த 2019-ம் ஆண்டில் தோற்ற ஒரு இடத்தையும், இந்தமுறை நிச்சயம் கைப்பற்றுவோம்... எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. தமிழக மின்துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. இதை குறைக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
கடன் சுமை: கடன் சுமையை குறைக்க மின் லாட்டரியை கொண்டு வரலாம். லாட்டரியில் பரிசு தொகை அறிவிக்காமல், வெற்றி பெற்றவருக்கு இலவச மின்சாரம், மானியம் கொடுக்கலாம். தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி அளித்து அதிகாரிகளின் மேற்பார்வையோடு கள்ளுக்கடையை நடத்தினால் நிதிச்சுமை குறைவதுடன் கள்ளச்சாராய விற்பனையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் வாய்ப்பாக அமையும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு உண்டு. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு துணை நிற்கும். தமிழகம்-கர்நாடகம் இடையிலான மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழகத்திற்கு சட்டரீதியான பாதுகாப்பு உண்டு என்றாலும், தமிழகத்தைப் பாதுகாக்க மாநில அரசும், பிற கட்சிகளும் முழுமையாக முயற்சிக்க வேண்டும்.
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிகள் எண்ணிக்கையை அதிகரித்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் குறையவில்லை.
அபத்தம்: நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறைவு. ஆனால் தென்மாநிலங்களில் அதிகமாக வரி வசூலித்துவிட்டு, அதற்குரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. பாஜக அரசிடம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திறமையும், மனமும் கிடையாது. ஒடிசா ரயில் விபத்துக்கு ஓட்டுநர் காரணம் என்று கூறுவது அபத்தம் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications