சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு காலியிடங்களை நிரப்பும் வகையில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று பதவியேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இதன்படி, வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார், ஹைகோர்ட் தலைமை பதிவாளர் பொன்.கலையரசன், மாவட்ட நீதிபதி (ஓய்வு) பி.கோகுல்தாஸ் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இதையடுத்து, புதிய நீதிபதிகள் 6 பேரும் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் ஆந்திரா, அலகாபாத், டெல்லி ஹைகோர்ட்டுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி வீதம், 3 நீதிபதிகளை சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. இந்த முடிவினை ஏற்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களும் விரைவில் பதவியேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications