மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவர் வெளியேறக் கோரி போராட்டம்... 500 பேர் கைது
திருச்சி: தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் பெ, மணியரசன் தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பெ. மணியரசன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெ மணியரசன் கூறியதாவது: அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் 60 சதவீதத்தினர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், 20 லிருந்து 30 சதவீதத்தினர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதனால் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தை காக்க முடியாமல் போய்விடுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரியும் வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழர்கள்தான் இருக்க வேண்டும். தமிழ்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும்,
ஏற்கனவே, கர்நாடகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களே இருக்க வேண்டும் என்று சரோஜினி மகிஷ் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனை அம்மாநில அரசு ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறது. அதைப் போன்றே தமிழ்நாட்டிலும் மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசுக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்திருக்கோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புகுந்து போராட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications