அதிமுகவில் "கஞ்சா"... மாஜி மேயர் சாருபாலா தொண்டமான் உள்பட 91,000 ..ஜெ. மகிழ்ச்சி!
சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை பசி சத்யா, தமாகாவில் இருந்த சாருபாலா தொண்டைமான் உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 91,000 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற மக்கள் பணியாற்றுங்கள். மக்கள் பணியாற்றுபவர்களுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று கட்சியில் இணைந்தவர்களை வரவேற்ற ஜெயலலிதா பேசியுள்ளார்.
இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடந்தது.தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்போரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் தமாகாவில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும் இன்று அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதேபோல நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை பசி சத்யா ஆகியோரும் இன்று அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக்கொண்டனர்.

வரவேற்ற ஜெயலலிதா
அனைவருக்கும் அதிமுகவின் உறுப்பினர் அட்டைகளை வழங்கிய ஜெயலலிதா அவர்களை வரவேற்றுப் பேசினார். திமுக, தமாகா, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 91ஆயிரம் பேர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
மாற்றுக்கட்சியில் இருந்து இணைய வந்துள்ள அனைவருக்கும் அதிமுக பயிற்சிக்களம் என்று கூறிய ஜெயலலிதா, அனைவரையும் உள்ளன்போடு வரவேற்பவதாக கூறினார்.

மகத்தான எதிர்காலம்
அம்மா உணவகம் போல வடஇந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை பிற நாடுகளும் பின்பற்றுகின்றன இன்னும் ஏராளமான மக்கள் நலப்பணிகளை செய்ய காத்திருக்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற மக்கள் பணியாற்றுங்கள். மக்கள் பணியாற்றுபவர்களுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் ஜெயலலிதா கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ள நிலையில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பலரும் பல்லாயிரக்கணக்கில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கானோர் மாற்றுக்கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.

சாருபாலா தொண்டைமான்
காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சாருபாலா தொண்டைமான், 2001ம் ஆண்டு திருச்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2001 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இவர் திருச்சி மேயராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் விலகி தமாகாவை மீண்டும் தொடங்கிய போது அவருடன் சென்றார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications