3 தொகுதி இடைத்தேர்தல்.. 91 வேட்புமனுக்கள் ஏற்பு - தேர்தல் ஆணையம்
3 தொகுதி இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது. அதிக அளவில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அக்டோபர் 26ம் தேதியன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. நவம்பர் 2ம் தேதி மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தஞ்சாவூர் தொகுதியில் 36 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 59 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதியில் 91 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 36 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 59 மனுக்களில் 46 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தததில் 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications