சென்னை புறநகரில் ஒரேநாளில் வெள்ளத்தில் மிதந்த 98 சடலங்கள் மீட்பு....
சென்னை: வெள்ளம் மூழ்கடித்த சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்கள்தான் பெருமளவு வெள்ளத்தால் இன்னமும் மூழ்கியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் 30,000 கன அடி நீர் திறக்கப்பட ஒட்டுமொத்தமாக முடிச்சூர், மேற்கு தாம்பரம் பகுதிகளை அப்படியே மூழ்கடித்தது.

இந்த வெள்ள நீர் அடையாற்றின் மூலம் கடலுக்கு செல்வதால் சென்னையின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் கரைபுரண்டோடியது. இந்நிலையில் சென்னை புறநகர்களான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளின் போதே 98 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications