Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாக்கி விளையாடிய மாணவன் திடீர் மரணம்.. பயிற்சியின்போது வலிப்பு.. ஆவடியில் பரிதாபம்

ஹாக்கி பயிற்சியின்போது வலிப்பு வந்து மாணவன் உயிரிழந்தான்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஹாக்கி விளையாடிய மாணவன் திடீர் மரணம்-வீடியோ

    சென்னை: ஆவடியில் விளையாடி கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஆவடி அடுத்த கண்ணடப்பாளையத்தை சேர்ந்தவர் ரவிகுமார். கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வசந்த குமார். ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9 வகுப்பு பயின்று வருகிறார்.

    9th std. student death in Aavadi

    ஹாக்கி வீரரான இவர் அண்மையில் மாவட்ட ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ளார். இதனால் பள்ளி முடிந்ததும் மாலை ஆவடி அஜய் விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஆனந்தகிருஷ்ணன் என்பவர் பயிற்சி அளித்து வருகிறார்.

    நேற்று மாலை வழக்கம் பயிற்சியில் ஈடுபட்ட வசந்தகுமார், பின்னர் மைதான சுற்றி ஓடி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கை,கால்களில் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள எச்.வி.எப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தகுமார் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்கி வீரர் விளையாட்டு மையதானத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+