ஆடைகளை களைந்து ஆபாச வீடியோ.. கத்தி முனையில்.. வாய்பேசமுடியாத சிறுமி பலாத்கார வழக்கில் திடுக் தகவல்
சென்னையில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை: அயனாவரத்தில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது தாய் அவரை பரிசோதித்தார்.

தொடர்ந்து பலாத்காரம்
அப்போது அவர் பல மாதங்களாக பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியிடம் பேசி யார் யார் இதில் ஈடுபட்டது என விசாரித்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

போதை மருந்து கொடுத்து
அதில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கவாலாளி, பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 15 பேரை அடையாளம் காட்டினார் அந்த சிறுமி. மேலும் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்தும் மயக்க ஊசி போட்டும், போதை மருந்து கொடுத்தும் அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியுள்ளன அந்த மனித மிருகங்கள்.

டாய்லெட்டில் வைத்து
மேலும் சிறுமியின் ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காட்டி கத்தி முனையில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும் ஆள் நடமாட்டமில்லாத மொட்டை மாடி, டாய்லெட், ஜிம் என பல இடங்களுக்கு அந்த சிறுமியை தூக்கி சென்று வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

18 பேர் கைது
கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்களாக நாள்தோறும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காவலாளி, பிளம்பர் என 18 பேரை கைது செய்துள்ளனர்.

காலி சிரஞ்சுகள்
மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி சிரஞ்சுகள், காலி மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 18 பேரில் 8 பேரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பு
18 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளையும் பதிந்துள்னர்.
வாய் பேச முடியாத காது கேளாத சிறுமியை 18 பேர் சேர்ந்து சீரழித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications