இதே வேலைதான் போல இவருக்கு... 11 முறை கைதான பலே போலி டாக்டர்!
வேலூர் அருகே 14 வயது சிறுமியை 60 வயது முதியவர் பலாத்காரம் செய்து கற்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: ஆம்பூர் அருகே 14 வயது சிறுமியை 65 வயது முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியாக கைதான போலி டாக்டர் 11 முறை கைதானவர் என்று தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் முதல் மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. 2வது மகளுக்கு 14 வயது. இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.
அவருக்கு அதே பகுதியில் கிளினிக் நடத்தி வரும் ஜெயவேல் என்பவரிடம் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை.

ஸ்கேனில் தெரிந்த உண்மை
ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.

பலாத்காரம் செய்த முதியவர்
அதே பகுதிதியில் ஸ்கூல் வீதியில் வசித்து வரும் பழ வியாபாரியான சலீம் என்ற 60 வயது முதியவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

சிறுமிக்கு கருக்கலைப்பு
இதையடுத்து சிறுமியை கடந்த வாரம் ஜெயவேலிடம் அழைத்து சென்றனர்.அவர் தெரிவித்தபடி பேரணாம்பட்டில் உள்ள ஜெயலட்சுமியிடம் அழைத்து சென்றனர். அவர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

போலீஸில் புகார் அளித்த தந்தை
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வேதனை அடைந்த சிறுமியின் தந்தை உம்ராபாத் போலீசில் புகார் அளித்தார்.

நட்பாக பழகிய முதியவர் சலீம்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சலீம் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். குடும்பத்தாரிடம் நட்பாக பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பேரன் பேத்திகள் உள்ள நிலையில்
சலீமுக்கு திருமணமாகி 5 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் உள்ளனர்.

கருக்கலைப்பு - போலி டாக்டர்
சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கலிவரதனும் விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த ஜெயலட்சுமி, பரிந்துரை செய்த ஜெயவேல் ஆகியோர் போலி டாக்டர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக கைது செய்த போலீஸ்
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய பழ வியாபாரி சலீமையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஜெயவேல் 11 முறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர் என்பது இன்னொரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications