காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவி... பிளேடால் கழுத்தை அறுத்த இளைஞர்... கன்னியாகுமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி அருகே காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவி பிளேடால் கழுத்து அறுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்டட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாழக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அப்பகுதியில் கட்டட வேலை செய்து வரும் மகேஷ் என்ற இளைஞர் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் மகேஷை காதலிக்க மாணவி மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
அப்போது அவரை மகேஷ் தனது நண்பர்களுடன் வந்து வழி மறித்துள்ளார். பின்னர் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த மாணவி மீண்டும் மறுக்கவே ஆத்திரமடைந்த மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் கைகள் மற்றும் கழுத்தில் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதையடுத்து மகேஷ் தனது நண்பர்களுடன் தலைமறைவானார். இதையடுத்து மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications