'குக்கர்' தினகரனின் ஆவி பறந்த பிரச்சாரம்... மக்கள் கூட்டத்தால் அசந்து போன அதிமுக!
சுயேச்சை வேட்பாளர் டிடிவி. தினகரனின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் கூடிய அளவு கடந்த மக்களின் கூட்டம் அதிமுகவை கிளியடைய வைத்துள்ளது.
Recommended Video

சென்னை : சென்னை ஆர்கே நகர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிடிவி. தினகரன் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டிருக்கிறது. இன்று காலை முதல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன் இறுதிக்கட்டமாக காசிமேடு மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் 5 மணியுடன் ஓய்ந்த நிலையில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்த தினகரன், கடைசியாக காசிமேடு பகுதியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
பொதுக்கூட்டத்திற்கு கூடுவது போல தினகரனின் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கே சிரமம் ஏற்படும் வகையில் 4 முனை சந்திப்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மக்களின் தலைகளாகவே 4 முனையிலும் தெரிந்தது.

தினகரன் நம்பிக்கை
பிரச்சாரத்தின் போது பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்க வேண்டுமோ அவர்களிடம் இருந்தால் தான் மரியாதை. எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த போது அந்த இரட்டை இலைக்கு இருந்த மவுசே தனி தான். நான் வேட்பு மனு தாக்கலுக்கு வந்த போது எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் வாக்களிப்பதாக மகளிர் வாக்களித்தனர்.

யார் பணத்தை செலவு செய்கிறார்கள்
பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு அடையாளமாக ரூ. 120 கோடி வரை பணத்தை வாரி இறைத்துள்ளனர். என்ன தான் வாக்காளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாலும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் ஓட்டு போட்டுவிடமாட்டார்கள். உளவுத்துறையினர் தினகரனுக்கு இவ்வளவு கூட்டமாத என்று திகைத்துப் போயுள்ளனர். அதிமுகவினர் தேர்தலுக்காக செலவு செய்யும் பணமே ஜெயலலிதாவை ஏமாற்றி சம்பாதித்த பணம் தான் இது மக்களுக்குத் தெரியாதா.

உண்மையான தொண்டர்கள்
முதல்வர் பழனிசாமி வயலைவிற்று காசு கொண்டு வந்தாரா, ஓ.பன்னீர்செல்வம் மாங்காய் விற்று காசு கொண்டு வந்தாரா அல்லது ஜெயக்குமார் தான் மீன் விற்று காசு சம்பாதித்து அதைக் கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கிறார்களா? என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் உண்மையான தொண்டர்கள்.

மக்கள் என் பக்கம் தான்
கடந்த 15 நாட்களாக எனக்காக 56 மாவட்டத்தில் இருந்து வந்த கட்சியினர் கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு, கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டு எனக்காக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆர்கே நகரில் கடந்த முறை எனக்கு ஆதரவு தெரிவித்த மக்களில் 98 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்றும்தினகரன தெரிவித்தார்.

அமர்க்களப்பட்ட இறுதிக்கட்ட பிரச்சாரம்
ஆர்கே நகரில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் கூட்டம், பேண்டு வாத்திய வரவேற்பு என்று அமர்க்களப்பட்டு விட்டது இறுதிக்கட்ட பிரச்சாரம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications