சசிகலாவை அன்றே சரியாக கணித்தவர்- அரசியல் சிங்கங்களை அலறவிட்ட வார்த்தை சித்தர் வலம்புரிஜான்!
பெயர்: டிசி ஜான்
ஊர்: நெல்லை மாவட்டம் உவரி
தாய்: வியாகுலம்
தந்தை: தேவசகாயம்
மூத்த சகோதரர்: ஆல்பிரட்
இளைய சகோதரர்: மோகன்
இப்படி எளிமையாக அறிமுகப்படுத்திவிட்டு கடந்து போகக் கூடியவர் அல்ல டிசி ஜான்.. தமிழ்நாட்டை தமது வார்த்தை ஜாலங்களால் வசீகரித்து, அரசியல் ஆளுமைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து சிம்ம சொப்பணமாக திகழ்ந்த வலம்புரிதான் அந்த டிசி ஜான்.

எழுத்துகளாலேயே ராஜ்யசபா எம்பி பதவியை திமுகவில் 1974-ம் ஆண்டு பெற்று அரசியலின் உச்சம் தொட்டவர் வலம்புரிஜான். ஆனால் ராஜ்யசபா எம்பியாகும் வயது கிடையாது எனும் சர்ச்சையில் அப்பதவியை இழக்கவும் செய்தார் வலம்புரிஜான்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசமிருந்து எம்ஜிஆர் பக்கம் போனார்.. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேச காலத்தில் எம்ஜிஆரால் தாய் இதழின் ஆசிரியரானார் வலம்புரிஜான். மற்றும் ஒரு முறை 1984-ல் ராஜ்யசபா எம்பியானார். உவரியில் பிறந்த டிசி ஜான் இப்போது அரசியல் பெருந்தலைகளின் உப்பரிகைகள் பக்கம் உலா வரும் உன்னதம் பிடித்தார். அதனால்தான் என்னவோ தமிழ்நாடு அறியாத அந்தப்புரத்து சங்கதிகளை அக்குவேராக ஆணிவேராக அசராமல் எழுதி அம்பலப்படுத்தினார். தமிழ்நாடு சட்டமேலவையிலும் அங்கம் வகித்தார். ராஜரிஷி, சப்தம் இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

அரசியல் பயணம் என்பது திமுக, ஜனதா கட்சி, அதிமுக, காங்கிரஸ், தமாகா, மீண்டும் திமுக என சுற்றுவட்ட பாதை பயணம் போல சுழன்று கொண்டிருந்தார். இறுதிக் காலத்தில் அரசியல் பயணத்தை நிறுத்தவும் செய்தார்.
அந்தக இரவில் சந்தன மின்னல், ஆண்டாள் அருளிய அமுதம், இதோ சில பிரகடனங்கள், உள்ளதைச் சொல்லுகிறேன், ஒரு ஊரின் கதை, ஒரு நதி குளிக்கப் போகிறது, நான் ஏன் திமுக? என 80க்கும் மேற்பட்ட அட்டகாசமான படைப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு தாரைவார்த்து கொடுத்த தகைசால் பெருமனிதர் வலம்புரிஜான். திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். கதை வசனம் எழுதினார். திரைப்படம் ஒன்றை கூட தயாரித்தார். கலைமாமணி, வார்த்தை சித்தர், ஞானபானு என பட்டங்கள் பெற்று அழியா புகழ் கொண்டார். இந்த நாள் இனிய நாள் என தொலைக்காட்சி பக்கமும் நாளாந்தம் உரை நிகழ்த்தினார். இத்தகைய மாமனிதர் வலம்புரிஜான் மண்ணுலகில் இருந்து விடைபெற்ற நாள் 2005ம் ஆண்டு இதே மே மாதம் 8-ந் தேதி.

ஒருநாள் சசிகலா முதல்வராகக் கூடும் என அரசியலை அச்சு பிசகாமல் கணித்த வார்த்தை சித்தர் வலம்புரிஜான் சொன்னது இதுதான்: ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!
நான் இதைச் சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications