ஒரு நொடியில் துண்டான கால்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. திருமங்கலத்தில் நேர்ந்த கொடூரம்
திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், ரயில் சக்கரத்தில் சிக்கிய சிறுவனின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உணவு, வாகனங்கள், இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல என சரக்குப் போக்குவரத்துக்கும் ரயில் போக்குவரத்து தேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பெரும்பாலும் முதலில் தேர்வு செய்வது ரயில் போக்குவரத்து சேவையை தான். இந்நிலையில், பொதுமக்களின் கவனக் குறைவால் சில நேரங்களில் விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. ரயில் படிக்கட்டில் பயணம் செய்வது, ரயில் கிளம்பியவுடன் ஓடிச் சென்று ஏறுவது, ரயில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இறங்குவது போன்ற நடவடிக்கையால் அசம்பாவிதங்களும் ஏற்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கியபோது சிறுவன் ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தபோது, சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (39). விவசாயியான இவரது மனைவி இருளாகி. இத்தம்பதிக்கு கருப்பு வாண்டையார் (11) எனும் மகன் உள்ளார். பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இருளாயி தனது தாய் பழனியம்மாள், மகன் கருப்பு வாண்டையாரோடு பொள்ளாச்சி சென்று விட்டு பாலக்காடு திருச்செந்துார் ரயிலில் திருமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 11 மணியளவில் ரயில் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர். அப்போது, சிறுவன் கருப்பு வாண்டையாரும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால் கருப்பு வாண்டையார் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதில், ரயில் சக்கரத்தில் சிறுவனின் வலது கால் சிக்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் பதறிப்போய் கூச்சலிட்டனர். இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலின் சக்கரத்தில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கியதால் மிகவும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் சிறுவனின் வலது காலை அகற்றினர். இந்த விபத்து தொடர்பாக மதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் கண் முன்னே சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications