சென்னையில் தொடர்ந்து எரியும் கார்கள்.. இன்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது!
சென்னை : சென்னையில் காசி தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. தலைநகர் சென்னையில் 105 டிகிரிவரை வெப்பம் பதிவாகியுள்ளதால் அனல்காற்று வீசிவருகிறது. அடிக்கும் வெயிலுக்கு சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. நேற்று கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பற்றியது.

இந்தநிலையில் சென்னையில் இன்று காசி திரையரங்கம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நண்பகல் 1 மணியளவில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரின் எஞ்சினில் இருந்து புகை வந்தது. உடனே என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.
தீப்பிடித்தவுடன், கார் ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கியதால் யாருக்கும் காயமில்லாமல் தப்பினர்.
உடனடியாக, காரில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications