கோவை: புதிதாய் குடிபுகுந்த வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி
கோவை: புதிதாக கட்டிய வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
கோவை நகரிலுள்ள செல்வபுரத்தில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ்க்கு 2 வயது. குமார் அசோக் நகரில் காட்டியுள்ள தனது புதிய அடுக்குமாடி வீட்டில் கடந்த வாரம் குடியேறினார்.
நேற்று மாலையில் குமாரின் மனைவி செல்வி அவர்களது இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டின் மேல்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, படியிலுள்ள பக்கவாட்டு கம்பியைப் பிடித்து விளையாடிய போது கம்பியை பிடித்திருந்த குழந்தையின் கை வழுக்கியதால் சந்தோஷ் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தான்.
இதில் சந்தோஷின் தலையில் பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சந்தோஷ் மரணமடைந்தான்.
இதுகுறித்து, கோவை செல்வபுரம் காவல்துறை எஸ்.ஐ. சிவராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். புதிதாக கட்டிய வீட்டில் குடியேறிய ஆறாவது நாளே நடந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பலரிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications