விஷால் , தீபாக்கே இப்படினா ”ஆண்டவர்” மனுதாக்கல் செய்தால்.... என்ன ஆகும்? கலகல பேஸ்புக் பதிவு
நடிகர் விஷால், தீபா வேட்புமனு நிராகரிப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், தீபா ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சமூக வலைத்தளங்கள் பேசு பொருள் ஆகி இருக்கிறது.
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த தீபாவின் மனு போதிய தகவல்கள் இல்லாததாலும், நடிகர் விஷால் மனு பல்வேறு திருப்பங்களுக்கு இடையேயும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த விஷயம் தான் ஹாட் டாஃபிக் ஆக இருக்கிறது. இது குறித்து நிறைய சமூக மற்றும் நகைச்சுவைக் கருத்துப் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பதிவில், விஷால் மற்றும் தீபாவின் வேட்புமனுக்கே இந்த நிலைமை என்றால், நடிகர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று கற்பனையாக ஒரு பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது...
அதில் இடம்பெற்றுள்ளதாவது
பெயர்: எம்பெயர் எதுவாக இருப்பினும் அதையே இவ்விடம் பூர்த்தி செய்ய நான் எதற்கு? மை நிரப்பிய பேனா கொண்டு மொய் எழுத வந்தவனல்ல நான், மெய் எழுத வந்த முதல்வன், என நீரே எழுதிக்கொள்ளக்கடவது. நான் யாரென்பது உமக்கு தெரியும் என்பதை யாமறிவோம்.
சொத்துவிபரம்: ஆண்டோர் மற்றும் ஆள்போரின் கணக்கறியா சிறுவனுக்குத் தெரியாதா, நான் ஈன்ற சொத்து ஸ்ருதியும், அக்க்ஷராவும், எம் தமிழ் நற்பணி இயக்கச் சகாக்களும் தான் என் சொத்தென்று?
மதம்: நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
இப்படியெல்லாம் இருந்தா, தேர்தல் அலுவலக ஊழியர்கள் ரத்தம் கக்கி செத்து போயிடுவானுங்க 😂 என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
