முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அதிரடி டிவீட்.. அதிமுகவினர் கொந்தளிப்பு
தமிழக முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் பதிவிட்டது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டெல்லிக்கும் அதிமுகவுக்கும் இடையே தூதராக செயல்பட்டு வருகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்பது நாடறிந்த உண்மை. அதிமுக அமைச்சர்களே துக்ளக் குருமூர்த்தி வீட்டுக்கு பகிரங்கமாக சென்று ஆலோசனை நடத்தினர்.
இதற்கு தினகரன் தரப்பு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர்.

கொந்தளித்த அதிமுக
இச்செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் துக்ளக் குருமூர்த்தி, முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து மிகவும் அநாகரீகமான வார்த்தைகளில் திடீரென விமர்சித்தும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

கைது செய்ய வலியுறுத்தல்
துக்ளக் குருமூர்த்தியின் ட்விட்டர் பக்கத்திலேயே மிகக் கடுமையான விமர்சனங்களை அதிமுகவினர் பதிலுக்கு முன்வைத்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வரை இழிவாக விமர்சித்த துக்ளக் குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தியும் வருகின்றனர்.

இழிவாக விமர்சிப்பதா?
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமது பதிலில், வார்த்தைகளை கவனமாக பதிவிடுங்கள்.. மற்றவர்களை இழிவாக விமர்சிக்கும் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள்? நோட்டாவை விட பாஜக ஏன் குறைவான வாக்குகள் பெற்றது என்பதை சொல்ல முடியுமா? என கொந்தளித்துள்ளார்.
|
கடும் கண்டனம்
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஹரி பிரபாகரன், முதல்வர், துணை முதல்வரை இழிவாக பேசிய குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என கொந்தளித்துள்ளார். மற்றொரு பதிவில் குருமூர்த்தி மிகவும் கடும் கண்டனத்தையும் ஹரி பிரபாகரன் பதிவு செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications