நெல்லையைக் கலக்கும் "புலி நாய்"!
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திறகுள் புலி புகுந்து விட்டதாக பரபரப்பு கிளம்பியதால் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் அது புலி அல்ல புலி மாதிரி கலர் கொடுக்கப்பட்ட பெரிய நாய் என்று தெரிய வந்துள்ளது.
நெல்லை, பாளை திருமால்நகர் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதோடு, 4 பேரை கடித்து குதறியது. இந்த சம்பவம் பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் புலியை போன்ற தோற்றத்தில் நாய் ஒன்று நடமாடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கொக்கிர குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் அந்த நாயின் உடலில் ஹேர்டை மூலம் புலியை போன்று வரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாய் இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். ஏதோ புலிதான் வந்து விட்டது என்று நினைத்து அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போதுதான் அது நாய் என்றும் அதன் உடலில் புலி போன்று வரைந்துள்ளதும் தெரியவந்தது. பின்னர் அந்த நாய்க்கு உணவு பொருட்கள் கொடுத்தனர். அதன்பிறகு தான் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரததிற்கு மேலாக பரபரப்பாக இருநதது.
இப்படி நாய்க்குப் புலி மாதிரி கலர் கொடுத்து பீதியை ஏற்படுத்துவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications