ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்- செங்கோட்டையில் ஒரு அதிசயம்
செங்கோட்டை: செங்கோட்டையில் நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு விலங்கு இன்னொரு விலங்குக்கு இப்படிப்பட்ட பாசத்தைக் காட்டுவது அரிய செயல் என்பதால் பலரும் இந்த இரு விலங்குகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஐந்தறிவு பிராணியின் ஆறறிவு பாசம்:
பெற்ற குழந்தைக்கு சாப்பாடு கொடுக்காமல் கொடுமைசெய்யும் நிலையும்,தாய் பால் கொடுத்தால் அழகு கெட்டுப் போய்விடும் என்றும் நினைக்கும் ஆறறிவு நிரம்பப் பெற்ற மனிதர்கள் வாழும் உலகில் ஒரு உயிரினத்திற்கு மற்றொரு உயிரினம் தாயுள்ளத்தோடு பால் கொடுப்பது காண்போர் மனதை நெருடத்தான் செய்கிறது.

ஆடுகளின் வீடு:
செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை சங்கரசுப்பிரமணியன் தெருவைச் சார்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன். இவரது மகன் கருப்பசாமி. இவர் தனது வீட்டில் 5க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நாயின் தாய்ப் பாசம்:
இந்த ஆடுகளின் காவலுக்கு ஒரு பெண் நாயையும் வளர்த்து வருகிறார்.இவர் வளர்க்கும் ஆட்டுக் குட்டி ஒன்று இவர் வீட்டு நாயிடம் தினமும் பால் குடித்து வருகிறது.

வேற்றுமையை வென்ற தாய்மை:
சிலதினங்களுக்கு முன் இவர் எதேச்சையாக வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார்.அப்போது தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

அதிசய பிறவிகள்:
அதன் பின் தினமும் அந்த குட்டி ஆடு நாயிடம் பால்குடிப்பது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் செய்தியாக பரவவே ஏராளமானோர் தினமும் இந்த காட்சியை பார்த்து சென்றவண்ணம் உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications