கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா கூட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது.
கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள்.

இந்நிலையில், போலீசாரின் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், குடியரசு தினத்திற்கு தங்கள் வீடுகளில் இருந்து ஒரு குழந்தை கூட போகாது என்று கோபத்தோடு கூறியிருந்தார்கள். அதற்கேற்ப யாரும் இன்று குடியரசு தின கலை விழா நிகழ்ச்சியை காண மெரினாவிற்கு செல்லவில்லை.
இதே போன்று, மதுரை, அலங்காநல்லூர், கோவை, ஈரோடு என பல இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து, மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்து வீட்டிலேயே உள்ளனர். போலீசார் காட்டிய கடுமையான கெடுபிடியும், வன்முறை சம்பவங்களும் மக்களை பெரும் அளவில் பாதிப்படைய செய்துள்ளன.

வன்முறை சம்பவம் நடந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் இன்னும் தீராமல் இருக்கிறது. போலீசாரின் வன்முறை தாக்குதலுக்கு பொதுமக்கள் இடத்திலும் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவேதான், தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா களையிழந்து காணப்படுகிறது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications