வலையில் விழுந்த டிரைவரின் மனைவி.. சின்ன சேலம் போலி சாமியாருக்கு வில்லங்க ஆசை.. அதிரடியாக கைது

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அருள்வாக்கு சொல்வது, பில்லி, சூனியம் எடுப்பது என சாமியார் போல் செயல்பட்டு வந்த முத்தையன் என்பவர், நண்பரின் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வர மறுத்த நிலையில், கள்ளக்காதலின்போது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இது தொடர்பான புகாரில் போலி சாமியார் முத்தையன் கைதாகி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் முத்தையன். இவருக்கு 42 வயது ஆகிறது. ஊருக்குள் அருள்வாக்கு சொல்வது, பில்லி, சூனியம் எடுப்பது உள்ளிட்ட சில செயல்களை செய்து வந்துள்ளார். முத்தையனுக்கும் சின்ன சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் நண்பர்களாகி உள்ளார்கள்.

kallakurichi crime

ஒரு நாள் டிரைவரின் குடும்ப செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இதையடுத்து அவர் தனது 50 சென்ட் நிலத்தை ரூ.4 லட்சத்துக்கு முத்தையனிடம் விற்பனை செய்துவிட்டார். அப்போது ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் குறிப்பிட்ட டிரைவரின் வீட்டுக்கு முத்தையன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் டிரைவரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இதையறிந்த டிரைவர், முத்தையனை கண்டித்தாராம். அத்துடன் தனது நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று முத்தையனை வற்புறுத்தியுள்ளார். மேலும் நிலத்திற்கு உரிய பணத்தை திருப்பி தருகிறேன் என்றும் முத்தையனிடம் டிரைவர் கூறினாராம். ஆனால் நிலத்தை கொடுக்க முத்தையன் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

இந்த நிலையில் அண்மையில் முத்தையன், டிரைவரின் வீட்டுக்கு சென்றாராம். அங்கிருந்த அவரது மனைவியை ஆபாசமாக பேசி திட்டி தாக்கியுள்ளார். அதை தடுத்த டிரைவரையும் தாக்கினாராம். மேலும் டிரைவரை பார்த்து உன் மனைவி என்னோடு உல்லாசத்துக்கு வரமறுத்தால் நாங்கள் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன். எனது செல்போன், மடிக்கணினியில் அந்த வீடியோக்கள் புகைப்படங்கள் உள்ளது என்று டிரைவரை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து டிரைவர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குற்றச்செயல் தொடர்பாக முகாந்திரம் இருந்ததால் முத்தையனை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முத்தையன் போலி சாமியார் என்பதும், பல ஏமாற்று வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+