2 பெண் குழந்தைகளை கொன்று வேலூரில் தந்தை தற்கொலை.. விசாரணையில் அம்பலமாகும் திடுக் தகவல்!
வேலூர் அருகே கடன் தொல்லையால் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் அருகே கடன் தொல்லையால் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவரது மனைவி கமலா. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 7 வயதுதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக போதுமான வருமானம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

அதிகரித்த கடன் தொல்லை
அதேநேரத்தில் குடும்பத்தை நடத்தவும் குழந்தைகளை காப்பாற்றவும் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கடன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

குழந்தைகள் கொலை
இந்நிலையில் கடன் தொல்லை தாங்கமுடியாத நிலையில் தனது வீட்டிலேயே 2 பெண் குழந்தைகளையும் தூக்கிட்டு கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது

தந்தையும் தற்கொலை
மேலும் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் - திடுக் தகவல்
வெங்கடேசன் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம் என கூறப்பட்ட நிலையில் செய்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் வெங்கடேசனுக்கும், மனைவி கமலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

மனைவியுடன் தகராறு
இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் கமலா வேலைக்குச் செல்வது வெங்கடேசனுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.

பெரும் சோகம்
இதனால் வெங்கடேசன் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் வெங்கடேசன் தன்னுடைய இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, வீட்டில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications