Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையில் முளைத்த முயல்! வித்தியாசமான ஹெல்மெட்டால் இளைஞருக்கு விழுந்த ரூ.10,000 ஃபைன்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குற்றாலத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட ஹெல்மெட் அணிந்து வலம் வந்த வாலிபரை போலீசார் தேடி பிடித்து அபராதம் விதித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் பயணிகளின் வருகை முன்பை விட அதிகரித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த பகுதியில் இளைஞர் ஒருவர் முயல் உருவம் கொண்ட வித்தியாசமான ஹெல்மெட்டை அணிந்தவாறு பைக்கில் ரவுண்ட் அடித்திருக்கிறார். இது அப்பகுதி மக்கள் மத்தியிலும், சுற்றுலா பயணிகள் மத்தியிலும் அச்சத்தை உருவாக்கியது.

A fine of Rs 10,000 was imposed on a young man who drove wearing a different helmet in Tenkasi

பொதுவாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள்தான் தங்களின் முகம் வெளியில் தெரியாமல் இருக்க இதுபோன்ற ஹெல்மெட்டை பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கையில், இந்த இளைஞர் ஏதேனும் குற்ற செயலை செய்யத்தான் இது போன்று ஹெல்மெட் அணிந்து சுற்றி வருகிறாரோ என்கிற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்தது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டு விசாரிக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். குற்றாலம் பேருந்து நிலையம், அருவி செல்லும் வழி, கடை வீதிகள் என அனைத்து பகுதிகளில் இருந்த கேமராக்களையும் சோதனை செய்ததில் சம்பந்தப்பட்ட இளைஞர், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் என்பது அடையாளம் காணப்பட்டது. இவர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் வெறுமென ஜாலிக்காகதான் இதுபோன்ற ஹெல்மெட்டை அணிந்திருந்ததாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லையென்றும் இளைஞர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு மோட்டார் வாகன சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு ஹெல்மெட் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது தென்காசி, நெல்லை போன்ற சிறுகுறு நகரங்களிலும் இது போன்ற அத்துமீறல்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடிக்கடி புகார்கள் வருகின்றன. தொடர் புகார்கள் காரணமாக, மோட்டார் வாகன சட்டங்களை இதுபோன்று மீறுபவர்கள் மீது உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+