அபிராமி- சுந்தரத்துக்கு மத்தியில் இப்படி ஒரு கள்ளக்காதல் ஜோடி..!!
கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததை தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஈரோடு: கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததை தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குன்றத்தூர் அபிராமியின் கள்ளக்காதல் வெறியாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தொடர்ந்து கள்ளக்காதல் தொடர்பான கொலைவெறிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு வெட்டும் தொழிலாளி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் 38 வயதான சுரேஷ். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். அந்தியூர் அருகே உள்ள அத்தாணிக்கு சுரேஷ் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

அடிக்கடி உல்லாசம்
அப்போது அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதுகுறித்து மாரியம்மாளுக்கு தெரியவந்ததும் சுரேஷை கண்டித்து உள்ளார்.

கோபித்து சென்ற மனைவி
ஆனால் ஜோதியுடனான கள்ளத்தொடர்பை சுரேஷ் கைவிடவில்லை. மேலும் குடித்துவிட்டு வந்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் சுரேஷிடம் கோபித்துக்கொண்டு மாரியம்மாள் தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவியை கண்டித்த கணவர்
இதற்கிடையே ஜோதியின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய கணவர் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தனது கணவரின் எதிர்ப்பு பற்றி ஜோதி, தனது கள்ளக்காதலன் சுரேஷிடம் கூறினார்.

தற்கொலை செய்துகொள்ள முடிவு
இதைத்தொடர்ந்து தனது மனைவிக்கும் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததாக கூறி வருத்தப்பட்டுள்ளார் சுரேஷ். கள்ளக்காதலை கைவிட முடியாமல் தவித்த அந்த ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியேறினார் ஜோதி.

2 பேரும் உடல்கருகி பலி
பின்னர் அவரும், சுரேஷும் ஒன்று சேர்ந்து அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.

தெய்வீக கள்ளக்காதல்
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவரையும் கொல்ல முயன்ற அபிராமி - சுந்தரம் கள்ளக்காதலுக்கு மத்தியில் இப்படியொரு தெய்வீக கள்ளக்காதல்..
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications