நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரைவிட்ட தாய்..தென்காசியில் பயங்கரம்
கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் ரவி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 9 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர், அவரது நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது சந்தேகம் அதிகரிக்கவே மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தற்கொலை செய்ய முடிவு
இந்நிலையில் நேற்றும் மகேஸ்வரி மீது சந்தேகமடைந்த அவரது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

குழந்தைகளுடன் தீக்குளிப்பு
அதன்படி இன்று காலை தனது கணவர் வெளியே சென்றதும் 9 வயது சிறுவன் விஷ்வா, மற்றும் 4 வயது குழந்தை தனுஸ்ரீ ஆகியோருடன் மகேஸ்வரி தீக்குளித்தார். இதில் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

கரிக்கட்டைகளாக கிடந்தனர்
வீட்டிலிருந்து அலறல் சத்தத்துடன் புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது மகேஸ்வரி தனது 2 மகன்களுடன் கரிக்கட்டையாக கிடந்தார்.

கணவரிடம் விசாரணை
இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் சந்தேகபுத்தியால் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அரிதர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications