லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை கைமாற்றம்: வருமானவரித்துறை திடுக் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை கைமாற்றம்- வீடியோ

புதுச்சேரி: லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை சசிகலா குடும்பத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நமது எம்ஜிஆர், ஜெயா டிவி உள்ளிட்ட அலுவலகங்களில் இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆச்சரியப்படும் அதிகாரிகள்

ஆச்சரியப்படும் அதிகாரிகள்

இந்நிலையில் சோதனையில் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

3 இடங்களில் சோதனை

3 இடங்களில் சோதனை

இந்நிலையில் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான லட்சுமி ஜுவல்லரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர். லட்சுமி ஜுவல்லரி புதுச்சேரி, சிதம்பரம் மற்றும் காரைக்காலில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பெரும் தொகை கைமாற்றம்

பெரும் தொகை கைமாற்றம்

லட்சுமி ஜுவல்லரியின் 3 நகைக்கடைகளில் 2 வது நாளாக சோதனை தொடர்கிறது. லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜியின் மூலம் சசிகலா குடும்பத்திற்கு ஒரு பெரும் தொகை கை மாறியிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓஷன் ஸ்பிரே..

ஓஷன் ஸ்பிரே..

இதையடுத்து லட்சுமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி அருகே ஓஷன் ஸ்பிரே நட்சத்திர ஓட்டலை லட்சுமி ஜுவல்லரி நடத்தி வருகிறது.

விசாரணை தீவிரம்

விசாரணை தீவிரம்

ஓஷன் ஸ்பிரே ஓட்டலை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார். இதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதை அடுத்து அவர்களிடம் வருமான வரித்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A large amount transfered from Lakshmi jewellors owner to Sasikala family Income tax official said. Income tax raid continueing as second day in sasikala family.
Please Wait while comments are loading...