பெற்றோர்கள் காதலை ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து காதல் ஜோடி தற்கொலை.. கிருஷ்ணகிரியில் பரிதாபம்!

கிருஷ்ணகிரியில் பெற்றோர் தங்களின் காதலை ஏற்கமாட்டார்கள் என நினைத்து காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரியில் பெற்றோர் தங்களின் காதலை ஏற்கமாட்டார்கள் என நினைத்து காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பிகாபதி- அமராவதி, லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் என அக்காலம் முதலே காதல் மனித சமூகத்தை ஆட்கொண்டிருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் அப்போது இருந்த காதல் பெரும் பாலும் இல்லை என கூறப்பட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிவை நினைத்துக்கூட பார்க்க முடியாத காதல் இன்றும் உள்ளது உண்மையே.

கிருஷ்ணகிரி காதல் ஜோடி

கிருஷ்ணகிரி காதல் ஜோடி

அதுபோன்றதொரு காதல்தான் கிருஷ்ணகிரியை சேர்ந்த அசோக்- மாதவியின் காதல். கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடையை அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த காதல் ஜோடி அசோக் - மாதவி.

தெரியவந்த காதல்

தெரியவந்த காதல்

கடந்த ஒரு வருடமாக இவர்கள் உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல், குடும்பத்தாருக்கும் ஊராருக்கும் தெரியவந்துள்ளது.

பிரித்து விடுவார்கள்

பிரித்து விடுவார்கள்

இதனால் பதறிய காதல் ஜோடி எப்படியும் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள், நிச்சயம் பிரித்து விடுவார்கள் என எண்ணியுள்ளது.

வீட்டு வாசலில் விஷமருந்தி

வீட்டு வாசலில் விஷமருந்தி

இதனால் சேர்ந்து வாழதான் முடியவில்லை, சேர்ந்து சாகலாம் என்று முடிவு செய்த அவர்கள் நேற்று காலை விஷம் அருந்தியுள்ளனர். இருவரும் அவரவர் வீட்டு வாசலில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விஷம் குடித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

பின்னர் அப்படியே மயங்கிய அவர்களை குடும்பத்தினர் கதறியபடி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இரண்டு பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியில் சோகம்

கிருஷ்ணகிரியில் சோகம்

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறியழுதனர். வாழ வைக்க வேண்டிய வயதில் இருகுடும்பத்தாரம் தங்களின் பிள்ளைகளை வாரிக்கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+