பஸ் டிக்கெட்: கூடுதல் கட்டணம் கேட்ட கண்டக்டர் மீது கத்தியை வீசிய பயணி!
புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்தில் ஒன்றில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
தருமபுரி: புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்து நடத்துனருக்கும், பயணிக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனால் பேருந்தில் இருந்த அந்த பயணி நடத்துனர் மீது கத்தியை தூக்கி வீசி இருக்கிறார்.
தருமபுரியில் இருக்கும் தொட்டம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு சென்ற பேருந்தில் மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகியோர் ஏறியுள்ளனர்.

அவர்களிடம் நடத்துனர் டிக்கெட்டிற்கு பணம் கேட்டு இருக்கிறார். இவர்கள் எப்போதும் கொடுக்கும் பணத்தையே கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நடத்துனர் புதிய கட்டண விவரத்தை கூறி கூடுதல் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் கூடுதல் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. உடனே வேலன் தன் பையில் இருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். கத்தி நேராக நடத்துனரை நோக்கி சென்று இருக்கிறது.
ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். வேலன் உடனே ஜன்னல் வழியாக குதித்து ஓடினார். ஆனால் மக்கள் வெற்றிவேலை பிடித்துவிட்டனர்.
வெற்றிவேல் போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் இவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி புகார் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications