நீ அனுபவிப்பே.. நான் பார்ப்பேன்.. 2 குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய தாயின் பரபரப்பு கடிதம்
மதுரையில் 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video

மதுரை: 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் தற்கொலைக்கு முன்பு அந்த பெண் எழுதி வைத்த கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை டி.வி.எஸ்.நகர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. 37 வயதான இவர் மினி லாரி டிரைவராக உள்ளார்.
இவருடைய மனைவி மைக்கேல்ஜீவா. தனியார் பள்ளியில் இருவரும் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹரிதா (4), ஹரிகிஷோர்குமார்(3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

மனைவியுடன் தகராறு
கடந்த சில நாட்களாக மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கணவர் ராஜா சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை முடிவு
நேற்று முன்தினம் மாலை கணவன் மனைவி இடையே இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த மைக்கேல் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்,

குழந்தைகளை கொன்று தற்கொலை
கணவர் ராஜா இரவு வேலைக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை உடைத்து உள்ளே அவர் சென்று பார்த்தபோது, மைக்கேல்ஜீவா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

ஆசை பட பாணியில்
மேலும் 2 குழந்தைகளும் ஆசை பட பாணியில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நிலையில் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு ராஜா தகவல் கொடுத்தார்.

வீட்டில் சோதனை
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

நான் போடும் உயிர் பிச்சை
அப்போது மைக்கேல்ஜீவா எழுதிய உருக்கமான 2 கடிதங்கள் சிக்கின. அதில் "நான் போடும் உயிர் பிச்சை. நான் யார் பெயரையும் எழுதப் போவதில்லை. எனக்கு செய்த துரோகத்திற்கு நீ அனுபவிப்பாய்.

நொறுங்கி விட்டேன்
அதை நான் பார்க்கத் தான் போகிறேன். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், எனது குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். என் குழந்தைகளின் பிறந்த நாள் 22.7.2018. ஆனால் உனக்கோ. இதுக்கெல்லாம் நீயும் சரி. உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க.

யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை
எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. இதுக்கு எல்லாம் என்னையும், என் குழந்தைகளை கேவலப்படுத்தியதற்கு அனுபவிப்பீங்க" என்று எழுதியிருந்தார்.

என் கணவர் கொள்ளி போடக்கூடாது
மற்றொரு கடிதத்தில் "ராணி அக்கா, தீபாவிற்கு நான் தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை மன்னிச்சிடுங்க. அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள். சைபின், தீபா மகன், மகள் ரியானா, ஆண்டனி தான் கண்ணுக்குள் இருக்காங்க. எங்களை அனாதை போல் எரித்து விடவும். என கணவர் கொள்ளி போடக்கூடாது" என்று எழுதி இருந்தார்.

பறிபோன மூன்று உயிர்கள்
கணவரின் சந்தேகபுத்தி மற்றும் கணவர் குடும்பத்தாரின் டார்ச்சரால் மைக்கேல் ஜீவா 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கணவர் ராஜாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications