விஜயகாந்த், வைகோ, வாசன் இணைந்து அதிமுக, திமுக, பாஜக அல்லாத தனி கூட்டணி!
சென்னை: அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸை தவிர்த்துவிட்டு வைகோ, விஜயகாந்த், ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கூட்டணியை அமைத்து தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
2016 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க இல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் அதில் இணைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய நான்கு கட்சிகளையும் இதனுடன் இணைக்கலாம் என்ற திட்டமும் உள்ளதாம்.
இந்த கூட்டணியின் பெயர் 'ஊழல் எதிர்ப்பு அணி' என்று இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. ஜி.கே.வாசனும் விஜயகாந்தும் எப்போதும் தோழர்கள்.
விஜயகாந்தும் வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன்-தம்பி என்று அழைத்துக் கொண்டனர். வைகோவின் வீட்டுக்கே சென்று நெகிழ்ச்சி காண்பித்தார் விஜயகாந்த்.
எனவே கருத்தொற்றுமை உள்ள இப்படி ஓர் அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல் ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றிணைப்பாளர்களுக்கு உள்ளது. ஆக, தி.மு.க., அ.தி.மு.க., பாஜக, காங்கிரஸ் அல்லாத அணியாக அமையப்போகிறது.
எனவே, தமிழகத்தில் பலமுனை போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது என்பது நிச்சயமாகிறது. ஆனால் இவையெல்லாம் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளன. திட்டம் படிப்படியாக செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications