ஊரை சுற்றி பணம் வாங்கி மோசடி செய்த மகன்.. கடன் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்து பெற்றோர் தற்கொலை!
கரூர் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மகன் பலரிடம் மோசடி செய்ததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்: வேலை வாங்கி தருவதாக கூறி மகன் பலரிடம் மோசடி செய்ததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட எல்.ஜிபி நகரை சேர்ந்தவர் பாபு. இவரது பெற்றோர் கஸ்தூரி - கவுசல்யா தம்பதி. பாபு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார். மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார்.
[அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவதா?.. ஸ்டாலின் கேள்வி]
இதனால் பணத்தை கொடுத்தவர்கள், மீண்டும் பணத்தை கேட்டு பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். நாள்தோறும் பணத்தை கொடுத்தவர்களின் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

பாபுவின் பெற்றோர்
கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வேதனையில் தவித்து வந்துள்ளனர் பாபுவின் பெற்றோர். உங்கள் மகன் வாங்கிய கடன் மற்றும் பணத்தை நீங்கள்தான் அடைக்க வேண்டும் என பணம்கொடுத்தவர்கள் பாபுவின் பெற்றோரை நிர்பந்தித்துள்ளனர்.

தீக்குளித்து தற்கொலை
இதனால் மனமுடைந்த பாபுவின் 60 வயதான தந்தை கஸ்தூரி, 55 வயதான தாய் கவுசல்யா ஆகியோர் நேற்று இரவு ஒரு மணி அளவில் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

உடல்கருகி பலி
இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் சோகம்
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் செய்த மோசடிக்காக பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் மகனை தவறவிட்டவர்
பலரிடம் பண மோசடி செய்து கடனாளியான பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் பாலத்திலிருந்து செல்பி எடுப்பதாக கூறி பெற்ற மகனையே ஆற்றில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications