பிரிந்து சென்ற மனைவி.. துக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்
மனைவி பிரிந்து சென்ற துக்கம் தாங்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்த போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கடலூர்: மனைவி பிரிந்து சென்ற துக்கம் தாங்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்த போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் புதுக்குப்பம் நேரு நகரைச் சேர்ந்தவர் அற்புத ஏசுபாலன். 35 வயதான இவர் தமிழக அரசின் போலீஸ்துறையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி பிரிதா பிரபா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.

பிரிந்து சென்ற மனைவி
போலீஸ்காரர் அற்புதராஜனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அற்புத ஏசுபாலனை அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

மதுக்கடைக்கு சென்றார்
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அற்புத ஏசுபாலன், அளவுக்கு அதிகமாக மதுகுடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அற்புத ஏசுபாலன் புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார்.

நடக்க முடியாமல்
அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததாக தெரிகிறது. இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் அவரால் வீட்டுக்கு செல்லமுடியாமல் மதுக்கடை அருகே படுத்தார்.

பரிதாபமாக பலி
பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீண்டநேரமாக அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை ஆரோக்கியசாமி மகனை பல இடங்களில் தேடிவிட்டு ஆராய்ச்சிக்குப்பம் மதுக்கடைக்கு வந்தார்.

கதறி அழுத தந்தை
அங்கு மகன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புகாரின்பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரர் அற்புத ஏசுபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கிராம மக்கள் சோகம்
மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் போலீஸ்காரர் ஒருவர் குடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications