ஜெயலலிதா ஒரு குற்றவாளி என அவர் சமாதியில் எழுதுவீர்களா? ஆ.ராசா கேள்வி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஜெயலலிதாவின் சமாதியில் அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர் என உச்சநீதிமன்றம் சொன்னதை எழுதிவைப்பீர்களா என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லில், திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரியாரின் சமாதியில் 'அறிவும் மானமும் மனிதருக்கு அழகு' என்று எழுதி வைத்துள்ளோம். அண்ணாவின் சமாதியில் 'எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது' என எழுதியுள்ளோம்.

A. Raja criticized Jayalalitha as a accused

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர் ஜெயலலிதா என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியார், அண்ணா சமாதிகளில் எழுதியிருப்பதைப் போல ஜெயலலிதாவின் சமாதியில் உச்சநீதிமன்றம் சொன்ன, 'அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர்' என்றா வாசகத்தை எழுதுவீர்களா என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will you write Jayalalitha was accused on her Samathi asked A. Raja, Ex. cabinet minister.
Please Wait while comments are loading...