வாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96
Recommended Video

சென்னை: 96 படம் குறித்து நமது வாசகர் ஸ்டீபன்ராஜ் நம்முடன் பகிர்ந்து கொண்டது..
ஜானுகளும், ராமச்சந்திரன்களும் தன் பழைய காதலை தேடி செல்வது Extra Marital Affair என்று தவறுதலாக புரிந்துகொண்ட இந்த சமூகத்தில், திரும்ப திரும்ப சொல்லவேண்டியது காதல் என்பது வெறும் வறட்சியான காமம் மட்டும் இல்லை. பெரும் வாழ்வில் காமம் ஒரு short lived passion, அது மட்டுமே வாழ்வை நகர்த்துவது இல்லை, அதையும் தாண்டி சிறு சிறு மகிழ்ச்சிகள் தான் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிறது, தன் பழைய காதலிடம் நாம் தேடுவது ஜானு சொல்வது போல, உன் மூக்கை உன் குழந்தையிடம் தேடவேண்டும், உன் சாயலை அந்த குழந்தையிடம் தேட வேண்டும் போன்றவை தான், affair அல்ல.

ஹார்மோன் ஆடிய ஆட்டத்தின் குறுகுறுப்பு, இப்போது நினைத்தாலும் ஜிவ்வென்று ஒன்று ஏறுமே, அது some what special.. அதை கிளறி விட்டுள்ளது #96. மிக கிளாஸ்சான ஷாட்கள் மேலும் அழகு, இசை உறுத்தவே இல்லை. சுபாஷினி (தேவதர்ஷினி) characterization அற்புதம் அப்படியான characterகளை கடந்து வந்தவன் அந்த இடத்தை சிலாகிக்காமல் இருக்க முடியுமா என்ன ? அதிலும் அவருக்கு சிறுவயது பெண்ணாக நடித்த அவர் மகள் நித்யா such an awesome selection. காதலுக்கு கோவில் கட்டினால், அதில் நிச்சயம் முக்கிய இடம் சதீஷ்களுக்கும், முரளிகளுக்கும் உண்டு, காதலின் காவலர்கள்!
சிறுவயது ராமச்சந்திரன், ஆதித்யா பாஸ்கர் மற்றும் சிறு வயது ஜானு கௌரி, இப்போது தான் அந்த ஹார்மோன் ஆட்டத்தை அனுபவித்தவர்கள் என்பதால் சந்தேகமே இல்லாத அபாரம்........
"கீதா உன் மனதை திறக்க கீ தா " என்பதை புரிந்துகொள்ள நம்மை புரிந்தவர்கள் தேவை, நம்மை புரிந்தவர்கள் சூழ் உலகு வரம்!
எங்கேயும் பிசகாத திரைக்கதை கொடுத்த டைரக்டர் பிரேம், பாராட்டுக்குரியவர், அவரின் தேர்வுகள் அத்தனையும் சிறப்பு.......
இதில் ராம் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது, காதலை புனித பிம்பத்துக்குள் சிக்க வைக்கும் வழமையான பழமை முயற்சியோ என்று அவரின் அறையில் இருக்கும் நம்மாழ்வார் படத்தை பார்க்கும் போது தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. காதல் ஒரு உணர்வு. அதற்காக மற்ற உணர்வுகளை தவிர்த்து வாழ வேண்டும் என்பதை நான் வெறுக்கிறேன், காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதை நான் முற்றும் முழுதாக நிராகரிக்கிறேன், காதல் நம் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் எப்போதும் பூக்கும் ...........
சார்லி என்ற மலையாள படம் பார்த்த பின்பு இப்படி pleasentடான படம் சில்லுன்னு ஒரு காதல், மௌன ராகம் போல தமிழிலில் மிக குறைவு, மனிதர்களின் உணர்வுகளை பேசும் படங்கள் தேவை, சற்றேறக்குறைய உண்மைக்கு நெருக்கமான படங்கள் தேவை, அப்படியான படமாக 96யையும், பார்க்கிறேன் !
[96 சினிமாவில் காட்டப்பட்டுள்ளது இனக் கவர்ச்சி இல்லை.. மானுட பேரன்பின் சிறுதுளி!]
இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மின்சாரமும், தொலைக்காட்சியும் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கபட்டதாம், எங்கள் தலைமுறைக்கு நிறைய பொழுது போக்குகள் உள்ளன என்பதை நினைவில் கொள்க.
வாழ்வின் ஒரு கட்டத்தில் நடந்தவைகளை முற்றாக நிராகரிக்க வேண்டியதும் இல்லை அதை வைத்து கொண்டு வேறு சிலவைகளை அடைய துடிப்பதும் தேவை இல்லை, வாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம்!
[உங்களோட "96" அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே! #96themovie]
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications