கிருஷ்ணகிரி: 3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது.. 4 மயக்க ஊசிகள் போட்டு பிடித்தது வனத்துறை!
கிருஷ்ணகிரி மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டுள்ளது.
Recommended Video

கிருஷ்ணகிரி: மூன்று பேரை மிதித்து கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டுள்ளது. நான்கு மயக்க ஊசிகள் செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்துள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் சுற்றி திரியும் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாய் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்து வருகிறது.

3 நாட்களில் 3 பேர் பலி
விளைநிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வரும் அந்த யானை மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒற்றை யானையால் கடந்த 3 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்றும் ஒருவர் பலி
இந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் நேற்று முன்தினம் தேவகுட்டப்பட்டியில் முனிராஜா என்பவர் உயிரிழந்தார். நேற்று சின்னாரில் ராஜப்பா என்பவரை ஒற்றை யானை மிதித்து கொன்றது.

தேவன் என்பவர் பலி
இந்நிலையில் ஒட்டெனூர் பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் இன்று தேவன் என்பவர் உயிரிழந்துள்ளார். ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தேவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யானையை தேடிய வனத்துறை
ஒற்றை காட்டு யானைக்கு மதம் பிடித்துள்ளதாக பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை தீவிரமாக தேடினர்.

யானைக்கு மயக்க ஊசி
இந்நிலையில் புதர் பகுதியில் மறைந்திருந்த யானையை கண்டுப்பிடித்த வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். மேலும் ஒரு மயக்க ஊசியை செலுத்தி யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மயக்கமடையாத யானை
யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் யானை மயக்கமடையாமல் சுற்றித்திரிந்தது.

4 மயக்க ஊசி
இதையடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் 4 முறை அந்த ஒற்றை யானைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மயங்கிய காட்டு யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றிச்சென்றனர்.

மக்கள் நிம்மதி பெருமூச்சு
3 பேரை கொன்ற காட்டு யானை பிடிப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications