டாஸ்மாக் போதை தலைக்கேறி தலைகுப்புற விழுந்த பள்ளி மாணவன்.. இது நெல்லை சோகம்
தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவர் ஒருவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில், சாலையோரம் விழுந்து கிடந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று வகுப்பை புறக்கணித்துவிட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று சேர்ந்து குடித்துள்ளனர். அதில், ஒரு மாணவனுக்கு போதை தலைக்கேறியதால் அங்கேயே தள்ளாடிக் கொண்டு இருந்துள்ளார்.
சக மாணவர்கள், போதை தலைக்கேறிய மாணவனை தெளியவைக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. எனவே அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த மாணவன் மட்டும், தட்டுத் தடுமாறியபடி அங்கிருந்து வந்து சாலையில் தடுமாறியபடி கீழே விழுந்து கிடந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த மாணவனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அந்த சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
சில தினங்களுக்கு முன்புதான் கோவையில் பள்ளிமாணவி ஒருவர் தனது தோழிகளுடன் மது அருந்தி வீதியில் கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தோழியருடன் மது அருந்தும் வீடியோ வாட்ஸ்சப்பில் பரவியது. இப்போது மாணவன் ஒருவர் இதேபோல நடந்துகொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications