சென்னை பல்லாவரத்திரல் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை.. தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு
சென்னை பல்லாவரத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: பல்லாவரத்தில் 2 குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கழுத்தை அறுத்து தாமோதரன் என்ற துணிக்கடை உரிமையாளர் படுகொலை செய்தார். கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன். அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து தாமோதரன் படுகொலை செய்துள்ளார். மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications