நாளை இரவுக்குள் டிடிவி தினகரனுக்கு எதிராக என்ன நடக்கப்போகிறது? எச்.ராஜா ஏதோ சொல்கிறாரே!
ஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என எச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் வெற்றி தொடர்பாக நாளைக்குள் டைம் பாம் வெடிக்கும் என்றும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இந்த தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைந்தார். திமுக டெபாசிட் இழந்தது. பாஜக நோட்டா பெற்ற வாக்குகளைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றது.

ஹவாலா ஃபார்முலா..
இந்நிலையில் தினகரனின் வெற்றி ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஹவாலா ஃபார்முலாவை பயன்படுத்தி தினகரன் வெற்றி பெற்றிருப்பதாகவும் அது நீடிக்காது என்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கட்சியும் ஆட்சியும் எனக்குதான்
கடந்த 29ஆம் தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்ட தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி 3 மாதத்தில் கவிழும் என தெரிவித்தார். மேலும் ஆட்சியையும் கட்சியையும் விரைவில் கைப்பற்றுவேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

எரிநட்சத்திரம் போன்றது..
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என்றார்.

நாளைக்கு டைம்பாம் வெடிக்கும்
மேலும் ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என்றும் அவர் சிரித்தப்படியே சூசகமாக தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் ஏதோ பூகம்பம் வெடிக்கலாம் என கருதப்படுகிறது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications