பழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து.. கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
Recommended Video

திண்டுக்கல்: பழனி அருகே மாருதி ஆம்னி மீது லாரி மோதியதில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.

பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டையத்தை சேர்ந்த அவர்கள், பழனி கோயிலுகு வந்துவிட்டு திரும்பியபோது, இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியதால், வேன் அப்பளம் போல நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில், அதில் பயணித்தவர்கள் அதே இடத்தில் இறந்து கிடந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை பதறச் செய்வதாக இருந்தது. அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து தடை பட்டது.

இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications