குட்டி நாயை தூக்கி எறிந்து கொடுமைப்படுத்தும் கொடூரன்.. வைரலான வீடியோ.. சென்னை போலீசில் புகார்
சென்னை: உயரமான கட்டிடத்தில் இருந்து குட்டி நாயை ஈவு இரக்கமின்றி கீழே எறிந்து அது துன்பப்படுவதை பார்த்து ரசிக்கும் ஒரு கொடூரனின் வீடியோ சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. சென்னை காவல்துறையில் இதுதொடர்பாக புகார் வழங்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேரால் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் மனதை உருக்கும் அந்த வீடியோ காட்சி இதுதான்:
உயரமான கட்டிடத்தில் ஆஜானுபாகுவான ஒரு வாலிபர் நிற்கிறார். தனது இடது பக்கம் குட்டி நாய் ஒன்றை பிடித்து வைத்துள்ளார். பிறகு மெதுவாக அதன் கழுத்து பகுதி, முதுகு பகுதி இரண்டையும் ஒரு சேர பிடித்து தூக்கி, அப்படியே அந்தரத்தில் நிறுத்தி பிறகு இரக்கமேயின்றி கீழே விடுகிறார்.
நாய் அலறியபடியே கீழே விழுந்து வலியால் கதறுகிறது. இந்த காட்சிகள் வீடியோவில் படம் பிடிக்கப்படுகின்றன. நாய் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷப்படும் கொடூர புத்தி கொண்ட அந்த கொடூரன் யார் என்பதே இப்போது சமூக தளங்களில் அலசப்படும் டாப்பிக்காக உள்ளது.
அந்த நபரையும், சம்பவ இடத்தையும் பார்க்கும்போது அது தமிழ்நாடாக இருக்கும் எனவே தெரிகிறது. சல்லை கண்ணன் என்பவர் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிந்து, அந்த நபரை கைது செய்ய உதவுவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், அந்தோணி ருப்பின் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்த வீடியோ குறித்து புகார் அளித்துள்ளதாகவும் பேஸ்புக் பதிவு ஒன்றில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications