ஆத்தாடி.. எத்தாத்தண்டி... வடிவேலு மாதிரி புலம்பவிட்டுட்டானுகளே!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யானை சாப்பிடுவது போல, சாதத்தை கவளமாக உருட்டி "அசால்ட்"டாக விழுங்குகிறார் இந்த நபர். இவர் உண்ணுவதை பார்த்து விட்டு உணவு பரிமாறுபவர்களுக்கே சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விதவிதமான உணவு என்றால் அதை விரும்பாதோர் யாரும் இருக்க மாட்டார்கள்.

அதிலும் சுவையாக சூப்பராக இருந்தால் கேட்க வேண்டுமா என்ன... புகுந்து விளையாட வேண்டியதுதான்.

கல்யாண சாப்பாடு

கல்யாண சாப்பாடு

பொதுவாக திருமண வீடுகளில் அனைத்து உணவுகளும் கிடைக்கும் என்பதால் அங்கு உணவு பிரியர்கள் பிரிச்சு மேய்ந்துவிடுவர். பலர் ரசித்து சாப்பிடுவதைப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

காதுக்குத்து என்றால்...

காதுக்குத்து என்றால்...

சைவ சாப்பாட்டையே ஒரு கட்டு கட்டும் நாம், அசைவ சாப்பாடு என்றால் விட்டுவிடுவோமா என்ன? ரசித்து ருசித்து ஒரு பிடி பிடித்துவிடுவோம். இன்றைய காலகட்டங்களில் மாப்பிள்ளை தாலி கட்டியதும் முதல் பந்தியில் உணவு உண்ண வேண்டும் என்று எழுந்து ஓடும் கூட்டம்தான் அதிகம்.

முதல் சுவைதான் சூப்பர்

முதல் சுவைதான் சூப்பர்

இவர்களை பொருத்தவரை முதல் பந்தியில் சமையல் கலைஞர்கள் தயாரித்த மெனுவில் உள்ள அத்தனை அயிட்டங்களும் கிடைத்துவிடும். ஆனால் பந்தி ஏற ஏற அயிட்டங்கள் குறைந்துவிடும். இது ஒருபுறம் இருக்க, பர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் போல, முதல் பந்தி உணவு சுவையாக இருக்கும் என்பது இவர்களின் பீட்பேக்!

ராசக்காபாளையம் பசுபதி

ராசக்காபாளையம் பசுபதி

ராசக்காபாளையம் படத்தில் நடிகர் ரஞ்சித்துக்கு அவரது தாயார் சாதத்தை கவளமாக (உருண்டைச் சோறு) உருட்டி உருட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். அதைப் பார்க்கும் விவேக் அவரிடம், இதை எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே தெரியவில்லையே என்பார்.

லபக் லபக்

லபக் லபக்

அதுபோல் இங்கு ஒருவிழாவுக்கு வருகை தந்த ஒருவர், சோற்று உருண்டையை பெரிய உருண்டையாக நல்லா நைஸா உருட்டி லாவகமாக வாயில் போட்டு சாப்பிடுகிறார். உணவு பரிமாறுபவர்களை அழைத்து அடுத்த ரவுண்டுக்கு உணவு பரிமாற அழைக்கிறார். அவர்கள் பரிமாறி விட்டு செல்லும் உணவையும் அவர் இப்படியே செய்கிறார். அதுவும் ஒரு பருக்கைக் கூட சிந்தாமல் சிதறாமல்...

காமெடிக்காக...

காமெடிக்காக...

இது செட் செய்து எடுத்தது போலவும் தெரிகிறது. அல்லது உண்மையாகவே இவர் எப்போதுமே இப்படித்தான் சாப்பிடுவாரா என்றும் தெரியவில்லை. போல் தெரிகிறது. நமக்கு என்ன டவுட்டுன்னா ரசத்தை சாதத்தில் ஊற்றிச் சாப்பிடுவாரா அல்லது வாளியோடு வாயில் ஊற்றிக் குடிப்பாரா என்பதுதான்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video shows that how the man from function eats the food orb.
Please Wait while comments are loading...