கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய மனைவி.. மயிலாடுதுறை அருகே பயங்கரம்

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

    மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன். 48 வயதான இவர், கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இடையூறு இல்லாமல்

    இடையூறு இல்லாமல்

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கணவர் அறிவழகன் வெளியூருக்கு வேலைக்கு சென்றதால் ரேகா- ராஜசேகரின் கள்ளக்காதல் எந்த இடையூறும் இல்லாமல் வளர்ந்துள்ளது.

    பல முறை உல்லாசம்

    பல முறை உல்லாசம்

    பல முறை வீட்டிலேயே இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த உள்ளூர்காரர்களும் உறவினர்களும் அறிவழகனின் காதில் விஷயத்தை போட்டுள்ளனர்.

    அடிக்கடி தகராறு

    அடிக்கடி தகராறு

    இதையடுத்து ஊருக்கு திரும்பிய அறிவழகன், ரேகாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் தகராறு

    மீண்டும் தகராறு

    இதையடுத்து வேலைக்கு சென்ற அறிவழகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    கொலை செய்ய திட்டம்

    கொலை செய்ய திட்டம்

    தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்தார் ரேகா. இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    கள்ளக்காதலை விடும்படி

    கள்ளக்காதலை விடும்படி

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அறிவழகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் ராஜசேகருடனான கள்ளக்காதலை விட்டு விடும்படி கூறியுள்ளார்.

    கள்ளக்காதலனுக்கு அழைப்பு

    கள்ளக்காதலனுக்கு அழைப்பு

    இதையடுத்து மதுபோதையில் இருந்த அறிவழகன், சிறிது நேரத்தில் அப்படியே தூங்கி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ரேகா, அறிவழகனை கொலை செய்ய வருமாறு கள்ளக்காதலன் ராஜசேகரை அழைத்துள்ளார்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

    இதையடுத்து அங்கு வந்தார் ராஜசேகர். பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

    நாடகமாடிய மனைவி

    நாடகமாடிய மனைவி

    இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார்.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்த அவர்கள், அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர்.

    ஒப்புக்கொண்ட மனைவி

    ஒப்புக்கொண்ட மனைவி

    அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்தை ஒப்புக்கொண்டார்.

    மயிலாடுதுறையில் பரபரப்பு

    மயிலாடுதுறையில் பரபரப்பு

    இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+