மயிலாடுதுறையில் பள்ளியில் மகனை விட்டு விட்டு திரும்பிய பெண்.. திடீரென வந்த லாரி.. நடந்த விபரீதம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பியபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதியது; இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு 41 வயது ஆகிறது. முத்து ராஜேஸ்வரி தம்பதியின் மகன் சந்தோஷ்க்கு 15 வயது ஆகிறது. சந்தோஷ் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை காலை ராஜேஸ்வரி தனது மகன் சந்தோஷை, பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்திருக்கிறார். மகனை பள்ளியில் பத்திரமாக விட்டு விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி உள்ளார் . மயிலாடுதுறையில் இருந்து சோழம்பேட்டை நோக்கி சென்ற போது திருமண மண்டபம் சாலை வழியாக ராஜேஸ்வரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னைமர சாலையில் அவர் திரும்பியபோது திடீரென அங்கு பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக பின்பக்கமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. .இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications