கள்ளக்காதலால் டிரைவருடன் ஓடிய பெண்.. மோகம் தீர்ந்து கள்ளக்காதலன் விலகியதால் தீக்குளித்து பலி!
நாமக்கல் அருகே டிரைவருடனான கள்ளக்காதலால் புருஷனை விட்டு ஓடிய பெண் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

நாமக்கல்: குமாரபாளையம் அருகே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் அவர் மோசடி செய்து ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயது ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

தனிமையில் உல்லாசம்
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
இது அரசல்புரசலாக கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார் பார்வதி. கள்ளக்காதலர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

மஜாவில் திளைத்த பார்வதி
ஈஸ்வரனுடன் கள்ளக்காதல் மஜாவில் திளைத்த பார்வதி தன் பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.

தீர்ந்துபோன மோகம்
கள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.

விலகிய ஈஸ்வரன்
ஒரு கட்டத்தில் பார்வதியின் வீட்டிற்கே செல்லாமல் இருந்துள்ளார் கள்ளக்காதலன் ஈஸ்வரன். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

தகாத வார்த்தையால்
ஆனால் பணத்தை திருப்பி தர மறுத்த ஈஸ்வரன் மனைவி மல்லிகா மற்றும் மைத்துனர் ஜம்புவுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

தொடர்ந்த மிரட்டல்
இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி கடந்த 8ஆம் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து குமாரப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த ஈஸ்வரன் தனது குடும்பத்துடன் வந்து பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாக பேசியுள்ளார்.

தீக்குளித்த பார்வதி
இதனால் கடும் மன உளைச்சல் மற்றும் விரக்திக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு திடீரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.

உயிரிழப்பு
இதனைக்கண்ட போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

அனைத்தையும் இழந்தார்
கட்டிய கணவனை விட்டுவிட்டு கார் டிரைவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடி வந்த பார்வதி மானம், மரியாதை மற்றும் பணத்தை இழந்ததோடு தற்போது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications