தாம்பரம் சேலையூரில் ஜாக்கி மூலம் வீட்டை தூக்கிய போது விபரீதம்.. உடல் நசுங்கி தொழிலாளி பலி
சென்னை : தாம்பரம் சேலையூரில் ஜாக்கி மூலம் கட்டிட உயரத்தை அதிகரிக்கும் பணியின் போது, நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை தாம்பரம் அருகே சேலையூர், கர்ணம் தெரு கிழக்கு பகுதியில் 60 வயதாகும் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி 25 வருடங்கள் ஆகிவிட்டது.

இவரது வீட்டின் முன்புறம் உள்ள சாலை வீட்டை உட உயரமாக இருந்த காரணத்தால, ஜாக்கி மூலம் வீட்டின்உயரத்தை அதிகரிக்க லட்சுமி முடிவு செய்தார். இதற்காக சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு தனியார் ஜாக்கி நிறுவனத்தை அணுகினார்.
அவர்களும் வீட்டை வந்து பார்த்துவிட்டு உயரத்தை அதிகரிக்கும் பணியில் இறங்கினர், கட்டிடத்தை ஜாக்கி மூலம் தூக்கி உயரத்தை அதிகரிக்கும் பணி கடந்த மே 11-ம் தேதி பணி தொடங்கியது. இந்த பணிகளை வட மாநில தொழிலாளர்கள் 11 பேர் அங்கேயே தங்கி செய்து வந்தார்கள்.
முதலில், கட்டிடத்தை துளையிட்டு சுற்றி ஜாக்கி பொருத்தும் பணிகளை செய்தார்கள்.இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக ஜாக்கிகளை கொண்டு கட்டிடத்தை உயர்த்தி, கீழ் பகுதியில் கட்டிடப்பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று காலை, கட்டிடத்தின் பின்புறத்தை உயர்த்தும் பணியில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்கார் (29), ஓம்கார் (20) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஜாக்கியை தூக்கியபோது, பின்புறம் இருந்த கான்கிரீட் சீலிங் உடைந்து சரிந்து விழுந்தனர் இதில், 3 தொழிலாளர்கள் சிக்கினர். பேஸ்கார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓம்கார் காயமடைந்தார். மற்றொரு தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து மேடவாக்கம், தாம்பரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து, கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து, போலீஸார் உடலை, குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications