அச்சத்துக்கும் மிரட்டலுக்கும் இடையே எழுத்து பணியை தொடர முடியாது: ஹைகோர்ட்டில் பெருமாள் முருகன்
சென்னை: மிரட்டலுக்கும், அச்சத்துக்கும் இடையே எழுத்துப் பணியை தொடர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதொருபாகன் நாவலின் ஆசிரியர் பெருமாள் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாதொருபாகன் என்ற நாவலை எழுதிய பேராசிரியர் பெருமாள் முருகனை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மிரட்டி அந்த நாவலை திரும்ப பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பேராசிரியர் பெருமாள் முருகனை மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது பெருமாள் முருகன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறையாக நான்தான் பள்ளிக்குச் சென்றேன். குழந்தைப் பருவம் முதல் கதை, கவிதைகள் எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த 2010 ஆம் ஆண்டு திருச்செங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு மாதொருபாகன் என்ற நாவலை எழுதினேன். இந்த நாவலின் ஆங்கில பதிப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த நாவல், திருச்செங்கோடு பகுதி பெண்கள் குறித்து அவதூறு கூறுவது போல் உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சில அமைப்புகள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து, என்னுடைய ‘செல்போனில்' தொடர்பு கொண்டு என்னைத் திட்டினர். நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த நாவலை எழுதவில்லை. நாவலை முழுவதுமாக படிக்காமல் என் மீது பழி சுமத்துகிறார்கள். இந்த சம்பவத்தால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.
இந்தப் பிரச்னையை சுமுகமாக முடிப்பதற்காக அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு வரவேண்டும் என்று கடந்த ஜனவரி 12 ஆம் தேதி எனக்கு அழைப்பு வந்தது. எனது வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதனுடன் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றோம்.
அங்கிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி, நாவலில் இடம் பெற்றுள்ள கருத்துகளுக்காக, வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என கோபத்துடன் கூறினார். அதனால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம். எனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன் என நான் குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு, வருத்தம் என்ற வார்த்தைக்குப் பதிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு என எழுதித்தர வேண்டும். அப்படி எழுதித் தந்தால் தான் எதிர்ப்பாளர்களை சமாளிக்க முடியும் என்று கூறி அதிகாரிகள் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதையடுத்து, எதிர்ப்பாளர்கள் மேலும் சில நிபந்தனைகள் விதிப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி கூறினார். நான் அதை கவனிக்காமல், எழுதி தந்த தாளில் கையெழுத்திட்டேன். இந்த பிரச்னையால், நான் இறந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்து எனக்கு நானே எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர் இறந்துவிட்டார் என்று மற்றவர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, அதை நான் நம்புகிறேன். மிரட்டலுக்கும், பயத்துக்கும் இடையே ஒரு எழுத்தாளராக எனது பணியை தொடர முடியாது. பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒரு எழுத்தாளரின் அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பெருமாள் முருகன் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பெருமாள் முருகனின் மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி உள்பட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பெருமாள் முருகன் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து மனு தாக்கல் செய்து விட்டதால், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மனுவை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மற்ற 2 மனுக்களை முடித்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications