ஜெயலலிதா நினைவு நாள் துக்க தினமாக அனுசரிப்பு... பேரணியாக வந்து அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ், ஓபிஎஸ்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது.
அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி வாலாஜா சாலை வழியாக மெரீனாவை வந்தடைந்தது. பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முதலாண்டு நினைவுதினம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இந்த ஓராண்டில் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.

கறுப்பு சட்டையில் பேரணி
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலையில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்றனர்.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி
இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினர்.

கறுப்பு நிற ஆடை
ஓபிஎஸ். ஈபிஎஸ், அமைச்சர்கள் அனைவருமே கருப்புசட்டை அணிந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுலா இந்திரா உள்ளிட்டோர் கறுப்பு நிற புடவையில் வந்திருந்தனர்.

முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி
வாலாஜா சாலையில் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சமாதியின் முன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்

டிடிவி தினகரன் தனியாக அஞ்சலி
இதனைத் தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் செல்கின்றனர். அவர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மெரீனாவில் குவிந்த அதிமுகவினர்
மேலும், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்துகிறார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை சாலையில் எங்கெங்கும் மனித தலைகளாக காட்சி அளிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications