சென்னையில் தொடரும் அட்டூழியம்.. போலீஸ் விரட்டிச்சென்றதில் டூவீலரில் சென்ற இளைஞர் பலி!

சென்னையில் தொடரும் போலீசாரின் அட்டூழியத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீசாரின் அட்டூழியத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சீட்பெல்ட் அணியாமல் சென்ற வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். இதில் மனமுடைந்த அந்த இளைஞர் போலீசாரின் முன்னிலையிலேயே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

A youth stuck in a lorry died on the spot after chasing the police in Chennai

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் அடாவடியே இளைஞரின் மரணத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில் இன்று மேலும் ஒரு இளைஞர் போலீசாரின் அடாவடியால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் விரட்டிச்சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பிதற்காக இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய அந்த இளைஞர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞரின் உறவினர்கள் போலீசாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+