ஆம் ஆத்மி வேட்பாளர்கள் உதயகுமார், ஜேசுராஜ் 29 ஆம் தேதி மனு தாக்கல்
நெல்லை: ஆம் ஆத்மியில் இணைந்துள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன்,ஜேசுராஜ் ஆகியோர் வரும் 29-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் கன்னியாகுமரி, தூத்துக்குடி,நெல்லை ஆகிய தொகுதிகளில்போட்டியிடுகிறார்கள்.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி மேலிடம் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளது. இதனிடையே 3 பேரும் வருகிற 29ந்தேதி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் இடிந்தகரையை விட்டு வெளியே வர உள்ளனர். சுமார் ஒன்றரை வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்த 3 பேர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. 3 பேரும் இடிந்தகரையை விட்டு வெளியே வராமல் போராட்ட களத்தில் இருந்தனர்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி கூட்டம் நெல்லையில் நடந்தபோது உதயகுமாரும், ஜேசுராஜும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே பேசினார்கள். இந்த நிலையில் 29 ந் தேதி அவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போலீசார் உதயகுமார், ஜேசுராஜ், புஷ்பராயனை கைது செய்ய தீவிரம் காட்டமாட்டார்கள் என தெரிகிறது.
இதனால் 3 பேரும் இடிந்தகரையை விட்டு வெளியே வந்து மனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications