ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனுக்கு 15 நாள் சிறை.. சேலம் சிறையில் அடைப்பு
ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறியதற்காக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாழப்பாடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வசீகரன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், விவசாய நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஊடகங்களிலும் பசுமைச் சாலைக்கு கண்டனம் தெரிவித்து பேசி வருகிறார்.
சமூக வலை தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். பசுமை வழிச்சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். வசீகரனின் இந்த பதிவு குறித்து சேலம் மாவட்ட குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், லிங்கேஸ்வரன் காரியாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சியில் மாநில தலைவர் வசீகரன் அவரது மதுரவாயலில் வீட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டது.
சென்னையில் கைது செய்யப்பட்ட வசீகரனை போலீசார் சேலம் அழைத்து சென்றனர். இன்று பிற்பகல் அவரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வசீகரன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications